வெள்ளி, 28 மே, 2010

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???


மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.

அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.

ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.

இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.

ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.

உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.

2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.

4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.

6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.

9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்

10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.

13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.

15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.

16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.

Download As PDF

புதன், 26 மே, 2010

உங்கள் Blogger side ஜ கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி?

நமது வலைப்பூவிற்கு அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள் போன்ற பிரபல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். இது தானாகவே நடைபெறும் என்றாலும், தேடுபொறியில் நமது வலைப்பூவிற்கான ரிசல்டை அதிகரிக்க, நாம் நமது பிளாக்கரின் சைட் மேப்பை கூகிள் தளத்தில் இணைப்பது அவசியம்.

இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். இங்கு டாஷ்போர்டில் பக்க இறுதியில் உள்ள Tools and Resources பெட்டியில் உள்ள Webmaster Tools ஐ க்ளிக் செய்யுங்கள்.


Webmaster Tool ஐ enable செய்யக் கேட்டால் enable செய்து கொள்ளுங்கள்.
உள்ளே சென்ற பிறகு Add a Site பொத்தானை அழுத்துங்கள்.


இங்கு உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். (http://kanany.blogspot.com/) இறுதியில் ஒரு '/' கொடுக்க மறவாதீர்கள். Verify செய்யச் சொல்லி வரும் வழிமுறையை செய்து விடுங்கள். பின்னர் Sitemaps பகுதியில் உள்ள Submit a Sitemap லிங்கை க்ளிக் செய்து,


அங்குள்ள பெட்டியில் கீழே உள்ள code ஐ பேஸ்ட் செய்யுங்கள்.

atom.xml?redirect=false&start-index=1&max-results=100
ஒருவேளை உங்கள் பிளாக்கில் 200 க்கும் மேற்பட்ட இடுகைகள் இருந்தால் 100 என்பதை 400 அல்லது 500 என மாற்றிக்கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கருக்கான சைட் மேப் கூகிள் தளத்தில் இணைக்கப் பட்டு விடும்.


Download As PDF

வியாழன், 20 மே, 2010

இரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி

தொலைக்காட்சியிலே அனைத்து வசதிகளையும் கொண்டு வர இருக்கும் கூகுளின் அடுத்தக்கட்ட முயற்ச்சியில் இண்டெல் மற்றும் சோனி இணைந்து பல கூடுதல் வசதிகளைத் தர இருக்கிறது
கூகுளின் அடுத்த தலைமுறைக்கான தொலைக்காட்சியில் கிடைக்கும் சலுகைகளைப் பார்த்தால் ய்ர்ரும் டிஷ் பக்கம் போகமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

வீட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்தால் போதும் அதுவும் கூகுள் தொலைக்காட்சி என்றால் அதனால் கிடைக்கும் பலன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஒரே தொலைக்காட்சியில் கம்ப்ப்யூட்டர் முதல் தொலைபேசி போன், டிஷ் மற்றும் இன்னும் பல சலுகைகளை கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.

வெளிவரும் காலம் 2015 ஆம் ஆண்டு சற்று அதிகமாக உள்ளது.

கூகுள் வழங்கும் சேவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிவரும் நேரம் சரிதான். ஐபாட்டில் இருந்து ஐபேட் வரை அனைத்து சலுகைளையும் கொடுக்கும் இதற்காக கூகுள் தற்போது ஒதுக்கி இருக்கும் தொகை 1.9 பில்லியன் டாலர். Download As PDF

செவ்வாய், 18 மே, 2010

முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ

முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள்.
இது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்பட பூட் சிடி தயாரித்து வைக்கும்படி கம்ப்யூட்டர் மலரில் கூட எழுதி இருந்தார்களே என்று அங்கலாய்க்கிறார்கள். நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ பார்மட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள்.

கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறேன்.

இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.

இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டாக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.

இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது.
இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி,எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி,

இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும். Download As PDF

சனி, 15 மே, 2010

கூகிளும் அதன் வரலாற்றுப் பாதையும்


இன்றைய இணைய உலகிள் கூகிள் எமக்குத் தரும் சேவைகளோ ஏராளம் ஏராளம்.

எனவே இந்த கூகிள் நிறுவனத்தையும் அதன் வரலாற்றையும் ஒரு சிறிய பார்வையிடுவோம்.

கலிபோர்னியா (Stanford University) இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ஜி பிரின் (Sergy Brin) லெரி பேஜ் (Larry Page) எனும் இரண்டு கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக தொடங்கிய ஒரு முயற்சியே கூகிள் எனும் தேடு இயந்திரம் தோன்றுவதற்கு வழிவகுத்தது எனலாம்.

இது இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராச்சிக்கான ஒரு விடயமாக மட்டும் இருந்தப்போதிலும், சேர்ஜி பிரின் மற்றும் லெரி பேஜ் இருவரும் இந்த ஆய்வை ஒரு தேடு இயந்திரத்திற்கான ஆய்வாக முன்னெடுத்தனர். தேடப்ப்படும் ஒரு சொல் அல்லது விடயம் எந்தெந்த இணைய பக்கங்களிலிருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து நமது தேடலுக்குறிய பக்கங்களை தேடுபதிலாக பட்டியலிடும் தொழில் நுட்ப முறையைச் சிறந்ததாக இவர்கள் கருதினர். இது இவர்களின் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தமது பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சியாக மட்டும் இருந்தப் போதிலும், ஆராய்ச்சியின் பயனாக இஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தின் பக்கங்களை தேடுவதற்கான ஒரு தேடு இயந்திரமாக "google.standford.edu" எனும் (டொமைன்) பெயரில் பாவனைக்கு உள்ளானது.

அதன் பின்பு இவ்விருவரும் 1998 ஓகஸ்ட் மாதம் தமது நண்பர் ஒருவரது வீட்டு வாகன நிறுத்தகத்தில் அதிகாரபூர்வமாக கூகிள் நிறுவனத்தை வர்த்தக நோக்குடன் ஆரம்பித்தனர். அதே மாதம் 1998 ஆகஸ்ட் 15 ம் நாள் இந்நிறுவனத்திற்குhttp://www.google.com/ எனும் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. இவர்களின் இப்புதிய நிறுவனத்தின் முதலீட்டிற்காகப் பலரை அணுகினர்.

இறுதியில் ஒருவாறு 1.1 மில்லியன் டொலர்களை தேடிக்கொண்டு கூகிளின் செவையை தொடர்ந்ததனர்.

வாகன நிறுத்தகத்திலிருந்த இந்நிறுவனம் 1999 மார்ச் மாதம் Silicon Valley எனும் இடத்திற்கு இடமாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறைவு; இந்நிறுவனத்தை வேறு ஒரு பெரிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. அதனால் 2003 ம் ஆண்டு வேறு ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றனர். அந்த கட்டிடத்திற்கு Googleplex என்று பெயரிட்டனர். 2006 ம் ஆண்டு அதேக் கட்டிடத்தை 319 மில்லியன் டொலர்களுக்கு கூகிள் நிறுவனம் விலைக்கு வாங்கிக்கொண்டது. கூகிளின் தேடு இயந்திர தொழில் நுட்பம் 2001 செப்டம்பரில் காப்புரிமை செய்யப்பட்டது. அத்துடன் இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ காப்புரிமையிலும் பட்டியலிடப்பட்டது. 2004 ஆகஸ்ட் 19 ம் நாள் கூகிள் நிறுவனத்தை ஒரு பொது நிறுவனமாக பதிவு செய்துக்கொள்ளப்பட்டது. கூகிள் தமது தேடு இயந்திரத்தினூடாக புதியப் புதிய மாற்றங்களைச் செய்து இணைய பாவனையாளர்களை வெகுவாக கவரத்தொடங்கியது. 2000 ம் ஆண்டிலிருந்து தேடு இயந்திரத்தில் தேடப்படும் சொல் அல்லது விடயம் தொடர்பானத் தேடுபதில்களுடன் விளம்பரங்களையும் கூகிள் நிறுவனம் காட்சிப்படுத்தி அதனூடாகவும் வருமானத்தை ஈட்டத் தொடங்கியது. 2007 செப்டம்பர் 30 ம் நாள் கணக்கெடுப்பின் படி இந்த நிறுவனத்தின் முழுநேரப் பணியாளர்கள் 15, 916 இருக்கின்றனர். NASDAQ இல் பட்டியலிடப்பட்டப் பொது நிறுவனங்களில் கூகிள் நிறுவனமே பெரியதாகும். லெரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகிய இவர்களால் உருவாக்கப்பட்ட கூகிள் NASDAQ பங்குச்சந்தையில் 2004 ஓகஸ்ட் 19 ம் நாள் 1.67 பில்லியன் டொலர்களுக்கு பங்குகள் விற்பனையாகின. அத்துடன் 23 பில்லியன் டொலர்களுக்கும் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று பல நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப்போதும் 87% வீதமானோர் கூகிள் தேடு இயந்திரத்தையே பாவிக்கின்றனர் எனக் கணிப்புகள் கூறுகின்றன.

இன்று Google எனும் பெயர் பிரசித்தி பெற்று இருந்தாலும்; "Googol" எனும் பெயரே எழுத்துப்பிழையாக "Google" என தட்டச்சு செய்யப்பட்டு விட்டதால், "Google" எனும் பெயரே பதிவுச்செய்யப்பட்டு தற்போதும் நிலைத்து நிற்கிறது.Googol என்றால் 1 ன்றுடன் 100 பூச்சியங்களை இணைத்தால் வரும் எண்ணிக்கையை குறிக்கும் தொகைக்கான சொல்லாகும். எப்படியோ Googol எனும் வார்த்தை Google என்று தவறாக தட்டச்சப்பட்டது என்றாலும், "Google" எனும் இவ்வார்த்தை இன்று உலகளவில் எல்லா மொழிகளிலுமே பயன்படும் ஒரு சொல்லாக நிலைத்துவிட்டது.

இச்சொல்லை 2006 ல் ஒக்ஸ்போர்ட் அகராதியில் "இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான ஒரு தொழில் நுட்பச் சொல்" என்று இணைக்கப்பட்டுள்ளது.

எப்படியோ இன்று இணையத்தில் நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப் போதும். எல்லோரது மனதிலும் நின்று நிலைத்து விட்ட ஒரு தேடு இயந்திரம் “கூகிள்” ஆகும். ஒரு நாளைக்கு பல பில்லியன் வார்த்தைகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தேடித்தரும் தேடு இயந்திரமாக எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது.

அத்துடன் நின்றுவிடாது; புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றைய நிறுவனங்களை கொள்முதல் செய்தல், பங்குதாரர்கள், விளம்பரங்கள், வியாபார யுக்திகள் என இணையத்தில் பல்துறைகளிலும் புகுந்து விளையாடுகிறது.

Download As PDF